(முஹம்மது)
அக்கரைப்பற்றில் நீண்ட காலமாக சீரமைப்பிற்காக காத்திருந்த பொதுச் சந்தையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (ஜூலை 26) ஆரம்பமானது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில், மீன் சந்தை, பொதுச் சந்தை வீதி, ஜஸ்மில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இந்த சுத்தப்படுத்தும் பணிகள், அக்கரைப்பற்று மார்க்கெட் வர்த்தக ஒன்றியத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் ஆலோசனையின்படி, பிரதி மேயர் யு.எல். உவைஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
துவக்கநாளில் நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணிகளில் மாநகர சபை உறுப்பினர்கள் அகமட் பாஹீம், ரியால், பாஸித் உள்ளிட்டோர் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் பங்கேற்று, மீன் சந்தை பின்னே உள்ள குப்பைக் குவியலை அகற்றும் பணி முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும், மீன்சந்தையின் கூரை மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகள் விரைவில் சீரமைக்கப்படும் எனவும், அவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி மேயர் உவைஸ் உறுதியளித்துள்ளார்