Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு?

Posted on July 27, 2025 by Admin | 144 Views

உலகத் தலைவர்களில் யார் அதிக நம்பிக்கையை பெறுகிறார் என்பதை தீர்மானிக்க, அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் மார்னிங் கன்சல்ட் சமீபத்தில் ஒரு பரந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் உலகின் முன்னணி நாடுகளின் தலைவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், அவர்களின் நாட்டு மக்களிடையேயும், சர்வதேச ரீதியிலுமான மதிப்பீடு எவ்வாறு உள்ளது என்பதையும் கண்காணிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் கடந்த ஜூலை 4 முதல் 10 வரை மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் உலகின் நம்பகமான தலைவர்கள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்த தலைவர்களின் பெயர்கள் மற்றும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். 100 மதிப்பெண்களில் 75 புள்ளிகளை பெற்று, மற்ற தலைவர்களை விடவும் தெளிவான முன்னிலையில் இருக்கிறார்.

முதல் எட்டு இடங்களில் உள்ள தலைவர்கள்:

  1. நரேந்திர மோடி (இந்தியா) – 75 மதிப்பெண்கள்
  2. லி ஜோ மியுங்க் (தென்கொரியா) – 59
  3. ஜாவிஸ் (அர்ஜென்டினா)
  4. மார்க் கார்னி (கனடா) – 56
  5. அந்தோனி அல்பனீஸ் (ஆஸ்திரேலியா) – 54
  6. கிளெடியா ஷெய்ன்பாம் (மெக்ஸிகோ) – 53
  7. கரின் கெல்லர்-சுட்டர் (சுவிட்சர்லாந்து) – 48
  8. டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா) – 44

இந்த ஆய்வை மையமாகக் கொண்டு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, தனது சமூக வலைதளத்திலும், “100 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் நேசிக்கப்படும் பிரதமர் மோடி, உலகளவில் மீண்டும் நம்பிக்கைக்கு உரிய தலைவராக முதன்மையான இடத்தில் இருக்கிறார். அவரின் வலுவான தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட பல தலைவர்களும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்