2024ல் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சிறப்பான புள்ளிகளைப் பெற்ற அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் சிறப்புவிழா பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச்.எம். சிறாஜ் அவர்களின் தலைமையில் கடந்த 27ஆம் திகதி ஹனீபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று கல்விப்பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம். றஹ்மதுல்லாஹ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் விஷேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல். பாயிஸ் (ADE), ஜே. பாத்திமா நஜா, ஆசிரிய ஆலோசகர் ஏ.ஆர்.எம். றிம்சான், திடீர் மரண விசாரணை அதிகாரி ஹுமைஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், SDEC உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் வெற்றியை கௌரவித்தனர்.
மாணவர்களின் இந்தப் பெருமை பாடசாலையின் கல்வி தரத்தையும் மாணவர்களின் திறமைக்கும் சான்றாக அமையும் வகையில், இந்த விழா உற்சாகமாக நடைபெற்றது.