முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
திட்டமிட்டு செயல்படும் குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவரால் தாம் அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு பதிவு செய்த குற்றச்சாட்டின்பேரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.