மருதானை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான பெண்கள் பாடசாலையொன்றில் 9ஆம் வகுப்பு மாணவிகள் ஐந்துபேர் போதைப்பொருள் மாத்திரைகள் (குளிசைகள்) பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை அதிபர் மருதானை பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக பாடசாலைக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட மாணவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைகளில், இந்த மாணவிகளில் இருவர் மட்டக்குளி பிரதேசத்திற்கு சென்று ஒரு நபரிடமிருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கி, தொடர்ந்து பாடசாலைக்கு கொண்டுவந்து இந்த மாத்திரைகள் பாடசாலையின் கழிவறையில் அருந்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவிகள் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளமை குறித்து மேலும் தெளிவான தகவல்களைப் பெற மருதானை பொலிஸார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் மாணவர்களின் எதிர்காலத்தையும், கல்வி சூழலையும் பாதிக்கும் என்பதால், பெற்றோர்கள் மற்றும் கல்வி பொறுப்பாளர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.