Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

எரிபொருள் விலைகளில் இந்த மாதம் மாற்றமில்லை

Posted on July 31, 2025 by Admin | 404 Views

இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை சீரமைப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய விலைகள் தொடரும் நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான எரிபொருள்களின் விலை விபரங்கள் பின்வருமாறு:

  • ஒக்டேன் 92 பெற்றோல் – ஒரு லீற்றர் ரூ. 305
  • ஒக்டேன் 95 பெற்றோல் – ஒரு லீற்றர் ரூ. 341
  • சுப்பர் டீசல் – ஒரு லீற்றர் ரூ. 325
  • ஒட்டோ டீசல் – ஒரு லீற்றர் ரூ. 289
  • மண்ணெண்ணெய் – ஒரு லீற்றர் ரூ. 185

எரிபொருள் விலை நிர்ணயம் மாதந்தோறும் சர்வதேச சந்தை விலை மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த மாதம் விலை மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்