Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உப்பு கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக தாமதம்

Posted on May 22, 2025 by Arfeen | 61 Views

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாடு வந்தடைய சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் என்று தேசிய உப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.சீரற்ற வானிலை காரணமாக இத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் நேற்று (21ம் திகதி) வரவிருந்த உப்புக் கப்பல் நாடு வந்தடைய முடியாமல் தடைப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.தற்போதைய உப்பு பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா மூலம் உப்பை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தனியார் துறையிலிருந்து 250 மெற்றிக் தொன் மற்றும் தேசிய உப்பு நிறுவனம் சார்பில் 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.சீரான காலநிலை நிலவியவுடன், இறக்குமதி செய்யப்பட்ட உப்புகள் தொடர்ச்சியாக நாட்டில் வரத்தொடங்கும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.