Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

முட்டைகளை கழுவுவதனால் உண்டாகும் ஆபத்துகள்

Posted on August 2, 2025 by Admin | 114 Views

முட்டைகளை நன்கு கழுவி வைத்திருப்பது சுத்தமாகும் என்ற எண்ணம், உண்மையில் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த பிரச்சினை பற்றி பேசும் அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க, “முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் கழுவும் செயலின் போது அதற்குள் புகுந்துவிடும் ஆபத்து இருக்கிறது. காரணம், முட்டையின் ஓடு சிறிய துளைகள் கொண்ட ஒரு அமைப்பாகும். இது முழுமையாக சுவர் போல் பாதுகாக்கப்பட்டதல்ல,” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “முட்டைகளை கழுவும் போது, அதன் மேலிருந்த தூசி, அழுக்கு, மற்றும் விலங்குகளின் கழிவுகள் தண்ணீரில் கரைந்து அந்த நுண்ணிய துளைகள் வழியாக முட்டையின் உள்ளே செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும்,” என்றார்

முட்டையின் மேல் ஒரு பாதுகாப்பு மேல்கூடு (protective coating) இருக்கிறது. அது முட்டைக்குள் கிருமிகள் செல்வதைத் தடுக்கிறது. நீர் கொண்டு கழுவினால், அந்த மேல்கூடு சில நேரம் கிழிந்துவிடும் அதனால் பாக்டீரியா (பேஸ்டீரியா, சால்மொனெல்லா) உள்ளே புகும் வாய்ப்பு அதிகம்.

முட்டையின் மீது சேறு, கோழி கழிவுகள் இருந்தால் சுத்தமான, ஈரமில்லாத துணியால் துடைத்தால் போதும். Europe& India போன்ற நாடுகளில் முட்டை கழுவப்படாமலே விற்கப்படுகிறது.