“உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்” என்ற கருப்பொருளில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு நாள் வதிவிட செயலமர்வு, நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் சிறப்பாக ஆரம்பம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வு, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
செயலமர்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, தங்களின் அனுபவங்களை பகிர்ந்தும், கட்சியின் எதிர்கால பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டனர்.
இவ்வகை செயலமர்வுகள், உள்ளூராட்சி நிர்வாகத்தில் தேர்தலால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் திறமைகளை மேம்படுத்தவும், மக்களுக்காக செய்யவேண்டிய பணிகளில் வழிகாட்டும் நடவடிக்கைகளாகும் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.