Top News
| கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆலோசனை | | கல்முனை தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸின் மீள்கட்டமைப்பு முயற்சிகள் தீவிரம் | | வியட்நாம் பெண் மொரகல்ல கடலில் மூழ்கி மரணம் |
Aug 12, 2025

ரயிலின் கழிப்பறையில் சிசுவின் உடல்

Posted on August 4, 2025 by Admin | 203 Views

கொழும்பு மாளிகாவத்தை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ரயிலின் கழிப்பறையில் சிசு உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கசப்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக, மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் விரைந்து நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தளம்–கொழும்பு கோட்டை இடையிலான பாதையில் இயக்கப்பட்ட ரயிலில். கடந்த வாரம், தூய்மை பணியாளரால் மாளிகாவத்தை தொடருந்து நிலையத்தில் ரயில் கழிப்பறையை சுத்தம் செய்யும் போது, ஒரு சிசுவின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, தெமட்டகொடை காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கில் முக்கியமான ஆதாரங்களாக செயல்படக்கூடியவையாக, புத்தளத்திலிருந்து கோட்டை வரை உள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலிருந்தும் சிசிடிவி காட்சிகள் கோரப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது