தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கியமான பிரேரணை தற்போது (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீக்கத்திற்கான பிரேரணை நிறைவேற 113 உறுப்பினர்கள், அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் அதனை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இது நிறைவேறினால், சபாநாயகர் அதன் முடிவை அறிவிப்பார். அதன் பின்னர், புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பான பெயரை ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரைப்பார்.