காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை 177 வாக்குகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு எதிராக எவரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
2002ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ் இது முன்வைக்கப்பட்டது.
சபாநாயகர் இந்த யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதனுடன், காவல்துறை தலைமையில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில், புதிய மா அதிபர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.