Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நாட்டின் தாதியர் சேவையில் வரலாற்று சாதனை – ஒரே நாளில் 3,147 நியமனங்கள்!

Posted on May 22, 2025 by Admin | 160 Views

நாட்டின் தாதியர் சேவையில் புதியதாக இணைக்கப்பட்ட 3,147 நபர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் சிறப்பு விழா, வருகிற சனிக்கிழமை (மே 24) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, தாதியர் சேவையின் வரலாற்றில் ஒரே நேரத்தில் வழங்கப்படும் மிகப்பெரிய அளவிலான நியமனமாகும். மேலும், இந்த விழாவுடன் இணைத்து, தாதியர் சேவையில் பணியாற்றும் 79 விசேட தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் அறிவிக்கப்படவிருக்கிறது.

விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.