Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் இன்றுடன்(06) தடை

Posted on August 6, 2025 by Admin | 128 Views

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவை 2025 ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தடையை மீறுவதன் மூலம் விதிமீறல் செய்யும் ஆசிரியர்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.