Top News
| முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ | | இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரொட்னி கிப்ஸ் நியமனம் | | இங்கிலாந்து செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷியும் தெரிவு |
May 25, 2025

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு 

Posted on May 22, 2025 by Hafees | 72 Views

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரக்காந்தன், பிள்ளையான் என அழைக்கப்படும், அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்த மனு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட நிலைமை அவரது அடிப்படை உரிமைகளைக் பாதித்துள்ளதாகக் கூறி, அவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதியரசர்கள் மகிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இன்று (22) அழைக்கப்பட்டது.