Top News
| இன்று பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு பொதுமக்கள் அவதானம் தேவை! | | இறக்காமத்திற்கு தனி நீதிமன்றம் தேவை: பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை (எம்.பி) வலியுறுத்தல் | | தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம் |
May 24, 2025

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Posted on May 23, 2025 by Admin | 67 Views

ஹஜ்ஜுப் பெருநாள் (ஈது-அல்ஹா) முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

2025 ஆம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி ஹஜ் பண்டிகை முன்னேற்பாடுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடாக, ஜூன் 6 (வெள்ளிக்கிழமை) மற்றும் ஜூன் 9 (திங்கள் கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேற்படி , இவ்விடுமுறை தினங்களுக்காக முஸ்லிம் பாடசாலைகள், மே 26 (திங்கள்) மற்றும் மே 27 (செவ்வாய்) ஆகிய தினங்களில் பதில் பாடசாலைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பாடசாலை 2025 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி(திங்கள்) ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.