(அபூ உமர்)
மருதமுனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல் எம்.எச்.எம். தாஜுடீன்(சரோ) அவர்களின் தலைமையில் நேற்று (11.08.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி ரகீப், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், காத்தான்குடி நகரசபையின் நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களும் கட்சிப் போராளிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது மருதமுனை அமைப்பாளர் பதவிக்கான நியமனக் கடிதம் எம்.எச்.எம். தாஜுடீன்(சரோ) அவர்களுக்கு கட்சியின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.