கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நாள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்கள் மற்றும் முன்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் விண்ணப்பிக்க முடியாதவர்கள், இன்று (12) நள்ளிரவு வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இதற்கான வசதி இணையத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் விண்ணப்பிப்பது கட்டாயம் எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.