மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து சுற்றுப்போட்டியில், தாய்த்திருநாட்டின் Colombo Youth Football Academyயை பிரதிநிதித்துவப்படுத்தி Vision Football Academyயின் கருங்கொடி மண்ணைச் சேர்ந்த இளம் வீரர்கள் சிறப்பான சாதனையைப் பெற்றுள்ளனர்.
மலேசியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர்கள், இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதினர். உற்சாகமான ஆட்டத்தைக் காட்டிய போதிலும், இறுதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தாய்நாட்டுக்கும் தாய்மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
“சிறிய பாதச்சுவடுகளுடன் ஆரம்பித்த பயணம் இன்னும் தொலை தூரம் செல்லும். இடைவேளையின்றி தொடர்ந்து சாதனை புரிய இறைவன் அருள்புரியட்டும்” என்று அக்கரைப்பற்று மாநகரசபையின் கிழக்கு வட்டார கௌரவ உறுப்பினர் ஏ.ஜி. நப்ரிஸ் பானு பாராட்டுத் தெரிவித்தார்.
Colombo Youth Football Academy வீரர்களுக்கும் அக்கரைப்பற்று மாநகரசபை தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.