(அபூ உமர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதி மற்றும் கொள்கை உருவாக்கக் குழுக் கூட்டம் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பங்கேற்புடன் நேற்று (12.08.2025) பிரதேச சபையில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச துறைசார் அதிகாரிகள், சபையின் கௌரவ உறுப்பினர்கள், சபையின் செயலாளர் எல்.எம். இர்பான் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பகுதிகளுக்கான எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.