அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் இருமொழிக் கற்கை பிரிவில் தரம் 7 இல் கல்வி பயிலும் ஏ. அப்துர் ரஹ்மான் என்ற மாணவன் 2025 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட சமூக விஞ்ஞான பொது அறிவுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தேசிய மட்டப்போட்டியில் பங்கேற்கும் பெருமை பெற்றுள்ளார்.
இம்மாணவரின் வெற்றிக்காக உழைத்த பாடசாலை சமூக விஞ்ஞானப் பிரிவுத் ஆசிரியையான எஸ்.ஏ. ஜனூசா மற்றும் பிற சமூக விஞ்ஞானப்பாட ஆசிரியர்களுக்கும், பாடசாலை சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
அப்துர் ரஹ்மான் தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற எமது செய்தித்தளமும் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.