அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இருமொழிக் கற்கைப் பிரிவிற்கு, 1997 ஆம் ஆண்டு க.பொ.தா. சாதாரண தரம் பயின்ற பழைய மாணவர்கள், மிகவும் தேவையான Multimedia Projector ஒன்றை அன்பளிப்பாக வழங்கினர்.
இக்கையளிப்பு நிகழ்வு கௌரவ நீதிபதி எம். எஸ். சம்சுதீன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (11) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
97’s O/L Batch சார்பாக அதன் தலைவர் எம். எம். எம். இஸ்ஸத், செயலாளர் ஏ. எல். ஜனூஸ் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் இணைந்து, பாடசாலை அதிபர் ஏ. எல். பாயிஸ் அவர்களிடம் Projector-ஐ வழங்கினர்.
நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எச்.எம்.றஸ்மி, பாடசாலை பிரதியதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர், இருமொழிக் கற்கைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பல நலன் விரும்பிகள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.