இன்று வெளியான மகப்பேற்று வைத்திய நிபுணர் இறுதிப் பரீட்சை முடிவுகளின் படி, பாலமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் அவர்கள் சித்தி பெற்றுள்ளார்.
பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இருந்து மகப்பேற்று வைத்திய நிபுணராக உருவாகும் முதலாவது மருத்துவர் இவரே என்பதால், இச் சாதனையால் பாலமுனை மண்ணும் முழு அட்டாளைச்சேனை பிரதேசமும் பெருமை அடைகிறது.
டாக்டர் சுதைஸ் முகம்மட் அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, நாமும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்கிறோம்