(அபூ உமர்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வட்டார ரீதியில் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை அறியும் மக்கள் காலடிக்குச்செல்லும் திட்டத்தின் முதலாவது சந்திப்பினை தைக்காநகர் வட்டாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் பற்றிய விசேட கலந்துரையாடல் நேற்று (13.08.2025) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ். எம். எ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ. சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ். எம். ரியாஸ், தைக்காநகர் வட்டார பட்டியல் வேட்பாளர் மற்றும் தைக்காநகர் முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.