(ரி.சலாகுத்தின்)
அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ் அவர்களின் சிந்தனையில் உருவான “வாரம் ஒரு பணி” வேலைத் திட்டத்தின் கீழ் மாபெரும் சிரமதானப் பணி இன்று (14.08.2025) காலை 7.45 மணிக்கு பாலமுனை முதலாம் பிரிவில் அவரது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
பணியின் தொடக்க நிகழ்வு, பாலமுனை மரண உபகார நிதி நிர்வாகத்தினரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருகை தந்த அதிதிகள் உளமாற வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், கௌரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், கௌரவ பிரதித் தவிசாளர் நாஜி, பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள் ஏ. எல். பாயிஸ், ஐ. ஏ. சிராஜ், எஸ். ஐ. எம். ரியாஸ், எஸ். பாஹிமா, எம். ஜே. பாத்திமா நஜா, மரண உபகார நிதியத்தின் ஸ்தாபகர் அல்ஹாஜ் ஐ. பி. எம். ஜிப்ரி, மரண உபகார நிதியத்தின் தலைவர் ஆசிரியர் ரி. சலாகுத்தீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் ஏ. எல். எம். அலியார், தேசிய காங்கிரஸ் பாலமுனை மத்திய குழு செயலாளர் ஏ. ரிக்காஸ், பிரதேச சபை செயலாளர் எல். எம். இர்பான், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பல இளைஞர்கள் பங்கேற்றனர்.
இச்சிரமதானப் பணி, சமூக ஒருங்கிணைப்பையும் பொதுநலச் செயற்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.