சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ்மா அதிபராக இன்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொறுப்பேற்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளித்தார். மேலும், துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க முயற்சி மேற்கொள்ளப்போவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறன் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஒழுக்கம் மற்றும் தர்மத்தை மையமாகக் கொண்ட பொலிஸ் துறையை உருவாக்குவதே தனது ஒரே இலக்கு என வலியுறுத்திய அவர், பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.