இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLEAS) தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
இதில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு (SLEAS) தெரிவு செய்யப்பட்டுள்ளமை வலயத்திற்கு பெருமை சேர்க்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு (SLEAS) தெரிவு செய்யப்பட்டுள்ள ஒலுவிலைச் சேர்ந்த எஸ்.ஹாஸிக், அக்கறைப்பற்றைச் சேர்ந்த என்.எம்.எம்.சாலிஹ், பொத்துவிலைச் சேர்ந்த ஏ.ஜே.அதீக் ஆகியோர்களுக்கு எமது செய்தித்தளம் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் எதிர்கால பணிகள் வெற்றியுடனும் சிறப்புடனும் அமைவதுடன் இவர்களுக்கான நியமனம் 2025.09.01ம் திகதி வழங்கப்படவுள்ளது.
எஸ்.ஹாஸிக் ஒலுவில் பிரதேசத்தின் முதலாவது SLEAS என்பதன் ஊடாக ஒலுவில் மண்ணும் பெருமையடைகிறது.