இலங்கை அதிபர் சேவை (SLPS) தரம் III-இல் பணியாற்றி வரும் லெப்டினன் N.M. முஹம்மத் ஸாலிஹ் (NDT, BA) அவர்கள்,இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS – III) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கமு/அக்/அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பிரதி அதிபராகப் பணிபுரியும் அவர்,எதிர்வரும் செப்டம்பர் 1ம் திகதி தனது புதிய பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.
பஸ்ஸறை தமிழ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி, அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி உள்ளிட்ட பல தேசிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கல்வித் துறையில் ஆழமான அனுபவத்துடன், சிறந்த தலைமைத்துவத் திறன், சமூக உறவு திறன் மற்றும் நேர்மையான பண்புகள் கொண்டவராக கல்வி சமூகத்தில் மதிக்கப்படுகிறார்.
அவர், முன்னாள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் மர்ஹூம் M.S. நெய்னாமுகம்மட் அவர்களின் மூத்த புதல்வர் ஆவார். M.S. நெய்னாமுகம்மட் அவர்கள் தனது சேவைக்காலத்தில் பல கல்வியியலாளர்களை உருவாக்கிய சிறந்த கல்வித் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றிருந்தார்.