தபால் ஊழியர்கள் நாளை (17) முதல் ஆரம்பிக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னிட்டு, அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிவித்துள்ளார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாளை முதல் இடைநிறுத்தமின்றி பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.