Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு இணங்க கள மதிப்பீடு..!

Posted on August 17, 2025 by Admin | 160 Views

(ஊடகப்பிரிவு)

கடந்த 02.07.2025 அன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பெருந்தெருக்கள் அமைச்சர் கெளரவ பிமல் ரத்னாயக்க அவர்களிடம் நாடாளுமன்ற உருப்பினர் கலாநிதி எம.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றான, நீண்டகாலமாக காத்தான்குடி பிரதான வீதியில் ஒளிராமல் பயண்பாடின்றி காணப்படும் வீதி சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, குறித்த விடயத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் மற்றும் உத்தியேகத்தர்கள் அடங்கிய குழு இன்று (15.08.2025) காத்தான்குடிக்கு விஜயம் செய்து, குறித்த இடம் மற்றும் அதனை சூழவுள்ள இடம் தொடர்பான கள மதிப்பீட்டை மேற்கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகரசபை உருப்பினர் இ.எம். றுஸ்வின் LL.B மற்றும் நகர சபை உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்தகாலப்பகுதியில் இச்சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.