Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 16, 2026

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted on August 17, 2025 by Admin | 443 Views

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தேசிய திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பயனாளிக்கான புதிய வீட்டின் அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (16.08.2025) சனிக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை 4ஆம் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் A.C. அப்கர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர்கள், செயற்பட்டாளர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.