நாடளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட காணிகள் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் குறித்து, நேற்று (23) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள காணிகளை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி, சமூகத்தின் பல தரப்புகளில் விமர்சனங்களை ஏற்படுத்தியதை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.
மேலும், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.