Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் 

Posted on August 21, 2025 by Admin | 103 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு இன்று மாலை (20) வெள்ளவத்தை அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் முத்து முஹம்மத், அஷ்ரப் தாஹிர், மற்றும் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினர் ரியாஸ் சாலி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்தின் போது, புதிய மாவட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும்  மாவட்டக் குழுத் தலைவராகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், கொழும்பு மாவட்ட செயலாளராகவும் தெஹிவளை – கல்கிஸ்சை  அமைப்பாளராகவும் மொஹமட் ரிஸ்வான், மத்திய கொழும்பு இணை அமைப்பாளர்களாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நிலார் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நௌஷாட், வட கொழும்பு அமைப்பாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நைசர் ஹாஜியார், கொலொன்னாவை பிரதேச இளைஞர் அமைப்பாளராக ரிஸ்மி, ஆகியோர் குறித்த பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டனர்.

இப்புதிய நியமனக் கடிதங்களை, கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டனர்