அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளில் மாட்டிறைச்சி விலைகள் கடை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபட்டு காணப்படுவதால், பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், மாட்டிறைச்சி விலைகள் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி. நியாஸ் கோரிக்கை விடுத்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாம் அமர்வு நேற்று (20) தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய நியாஸ் உறுப்பினர், விலைகள் சீராக இல்லாததால் பொதுமக்கள் குழப்பமடைந்து வருவதாகவும், விலைகள் ஒரே நிலைப்படுத்தப்பட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் உலையாற்றுகையில்,
கட்டாக்காலியாக அலைந்து திரியும் மாடுகள் காரணமாக விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் வீதிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இது தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார். கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் சீரற்ற நிலையை உருவாக்குவதால் வாகன சாரதிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் பயிர்கள் சேதமடைவதோடு, வீடுகளின் சுற்றுப்புறங்களிலும் அசௌகரியங்கள் உண்டாகின்றன. எனவே, கட்டாக்காலியாக அலைந்து திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தி, அதன் உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.