கண்டி வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் School Development and Environment Committee (SDEC) குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பையுடன் பாராளுமன்ற வளாகத்தில் இன்று(21) சந்திப்பு மேற்கொண்டனர்.
இச்சந்திப்பில், பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உடனடி தேவைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. பாடசாலைக்கான முன்னேற்ற முன்மொழிவுகளும் இவ்வேளையில் கௌரவ உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், SDEC செயலாளர் எஸ்.எம். ஸாஹிர் (JP), SMC குழு ஆசிரியர்கள் மற்றும் SDEC உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.