தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற்சங்க முன்னணி, எந்தவொரு கலந்துரையாடலுக்கும் தயாரில்லை என்று தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக பண்டார, “போராட்டத்தை கைவிட்டு பேச வருமாறு தபால்மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவுறுத்தினாலும், எங்கள் சங்கத்தினர் அந்த அழைப்பை ஏற்கத் தயாரில்லை” என்று கூறினார்.
மேலும், இதுவரை சம்பந்தப்பட்ட அமைச்சரிடமிருந்து எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது வரை சுமார் 17 இலட்சம் கடிதங்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன என்றும் சிந்தக பண்டார தெரிவித்தார்.