Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்கவின் பிணை தீர்ப்பு மீன்டும் தாமதம்

Posted on August 22, 2025 by Admin | 231 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனுவுக்கு தொடர்பான தீர்ப்பு, எதிர்பாராத மின்சாரத் தடையால் மீண்டும் தாமதமாகியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மின்சாரத் தடையால் விசாரணை இடைநிறுத்தப்பட்டு, வழக்கு மீண்டும் தாமதமாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படுமா அல்லது காவலில் தொடர வேண்டுமா என்ற கேள்விக்கான தீர்ப்பை அறிய பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் கவனித்து வந்த நிலையில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவரது வழக்கறிஞர், “மின்சாரத் தடையால் விசாரணை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவானதால் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்