அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (25) நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாளை காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகவுள்ள இந்தப் பணிப்புறக்கணிப்பு, வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் இன்று (24) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.