தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
“மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அவருக்கு மேலும் ஓய்வு அவசியம் என்பதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை,” என்று சிறைச்சாலைகள் ஊடக ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறினார்.
இதேவேளை, நீதிமன்றம் (Zoom) தொழில்நுட்பம் வழியாக விக்ரமசிங்கவை இணைக்க உத்தரவிட்டால், அதற்கான தேவையான வசதிகளை ஏற்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.