Top News
| மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து |
Oct 7, 2025

ஒலுவிலின் நாமத்திற்கு ஒளியூட்டிய எஸ்.ஹாஸிக் ஒலுவில் ஹம்றா மகா வித்தியாலயத்தில் கெளரவிக்கப்பட்டார்

Posted on August 26, 2025 by Admin | 88 Views

ஒலுவில் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை ஆசிரியர் கல்வியியலார் சேவைக்கு (SLEAS) தெரிவு செய்யப்பட்ட ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய ஆசிரியர் S.ஹாசிக் அவர்களை

பாடசாலை ஆசிரியர் நலனோம்பல் குழுவின் ஏற்பாட்டில் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அஷ்ஷேக் யூ.கே.அப்துர் ரஹீம் நளீமி தலைமையில் நேற்று(25) வெகு விமர்சையாக பாடசாலையின் காலை ஆராதணையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளரும் EPSI இணைப்பாளருமான  MHM.றஷ்மி கலந்து சிறப்பித்ததுடன் SDEC உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் பங்குபற்றினர். 

மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை நலனோம்பு  குழு உறுப்பினர்களினால் வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.