பத்து வருடங்களுக்குப் பின்னர், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பாடசாலைகள் கிரிக்கெட் போட்டி, அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியின் இறுதியில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய அணிகள் மோதின. கடும் போட்டிக்குப் பிறகு, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் வெற்றி பெற்றாலும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாகாண மட்டத்துக்கான தெரிவை உறுதிப்படுத்தியது.
இந்த முன்னேற்றம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.