Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரியின் முன் மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Posted on May 27, 2025 by Admin | 302 Views

(ஹபீஸ்)

அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரிக்கு முன்பாக இன்று (27.05.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கனரக டிப்பர் வாகனமும் மோதியதால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாலமுனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.