Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம்

Posted on August 30, 2025 by Admin | 109 Views

(தெளிவு செய்தியாளர்)

அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புக் கூட்டமொன்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், பிரதேச செயலாளர் ஏ. சி. அஹமத் அப்கர், பிரதேச சபை செயலாளர் எல். எம். இர்பான், அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறை குழுத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ். எல். தாஜுதீன், விளையாட்டு உத்தியோகத்தர்கள், நடுவர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தித் திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. மைதானத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்கான திட்ட வரைபடங்கள் இக்குழுவினரால் தயாரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இச்செயற்பாடு அட்டாளைச்சேனை இளைஞர்களின் விளையாட்டு முன்னேற்றத்துக்கும் சமூக விளையாட்டு நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.