Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் 

Posted on May 27, 2025 by Hafees | 319 Views

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (27.05.2025) இடம்பெற்றது. இந்த கூட்டம் மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர் (PC), எம்.எஸ்.உதுமாலெப்பை, அஷ்ரப் தாஹிர், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, பிரியந்த விஜயரத்ன மற்றும் ஏ.எம்.எம். ரத்வத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்று மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கிய விவாதங்களை முன்னெடுத்தனர்.