(அக்கறைப்பற்று செய்தியாளர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் வெற்றிடமாக உள்ள ஆசிரியர் ஆலோசகர் பதவிகளை தற்காலிக அடிப்படையில் (Cover up) நிரப்புவதற்கான அறிவிப்பை அக்கறைப்பற்று கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவைப்படும் பாடப்பிரிவுகள்
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். கல்வி சான்றிதழ்கள் (PGDE/Trained Teachers) மற்றும் கற்பித்தல் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், 10 வருடங்களுக்குள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கல்வி கற்பித்த அனுபவம், நல்ல உடல்நலம், சிறந்த நடத்தை மற்றும் குற்றச்செயல் பதிவுகள் இல்லாமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகைமைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
சுயவிவரம் (CV) மற்றும் தேவையான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 8 ஆம் திகதிக்குள் அக்கரைப்பற்று கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை
கல்வித் துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்நியமனங்கள் நீதியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. கடந்த காலங்களில் ஆசிரியர் ஆலோசகர் நியமனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெரிவு அல்லது ஆட்சேர்ப்பு செயல்முறையில் மீண்டும் முறைகேடுகள் இடம்பெற்றால், பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.