இணையத்தில் “குறைந்த நேரப் பணிக்கு அதிக சம்பளம்” வழங்குவதாகக் கூறி வெளிவரும் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலை குழு அறிவுறுத்தியுள்ளது.
மோசடிகாரர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய விளம்பரங்கள் மூலம் தனிநபர்களை குறிவைத்து, போலியான வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பதிவு கட்டணம் அல்லது முன்பணம் கோருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளில் சிக்காமல் இருக்க, வேலை வாய்ப்பு மோசடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் தவிர்ப்பது குறித்து மக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில், இலங்கை கணினி அவசரத் தயார்நிலை குழு சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.