(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் கல்வி வரலாற்றில் அழியாத தடத்தினை பதித்துள்ளன.
வெட்டுப்புள்ளிகளை 07 மாணவர்கள் சிறப்புடன் பெற்று இதுவரை இல்லாத உன்னத சாதனையைப் படைத்திருப்பதோடு மொத்தம் 36 மாணவர்கள் தோற்றியதில் 32 மாணவர்கள் 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர் என்பது கல்வி வரலாற்றில் பெருமை கொள்ளத்தக்க சிறப்பான தருணமாகும்.
இச் சாதனையின் பின்னணியில் கனவுகளை இலக்காகக் கொண்டு பாடுபட்ட மாணவர்களின் விடாமுயற்சி, உறுதுணையாக இருந்த பெற்றோர்களின் தாராள ஆதரவு, அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிகாட்டிய ஆசிரியர்களின் உழைப்பு, முன்னோக்கிய பார்வையுடனும் தொலைநோக்கு தலைமைத்துவத்துடனும் பாடசாலையை வழிநடத்திய அதிபரின் அருமையான பங்கும் ஒளிர்வாகக் காட்சியளிக்கின்றன.
இன்றைய இச் சாதனை நாளைய கல்வி வெற்றிகளுக்கான உறுதியான அடித்தளமாகவும்,
நம் மாணவர்கள் கல்வியிலும் வாழ்விலும் மேலும் உயர்ந்த சிகரங்களை அடையும் ஊக்கமாகவும் அமைகிறது.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் மாணவர்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும், பிரதி அதிபர்களையும், பெற்றோர்களையும், முழுப் பாடசாலை சமூகத்தையும் இதயம் கனிந்த வாழ்த்துகளாலும் பாராட்டுகளாலும் போற்றுகிறோம்.
இன்று எழுதப்பட்ட இச் சாதனை, நாளைய தலைமுறைக்குப் பேரொளி தரும் வரலாற்றுச் சான்றாக நிலைத்திருக்கட்டும்!