(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலயம் தனது கல்வி வரலாற்றில் புதிய பொற்காலத்தைத் தொடங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் பாடசாலையின் கல்வி பயணத்தில் அழியாத வெற்றிக் கல்லாகப் பதிந்துள்ளன.
இந்த ஆண்டு, 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளதோடு, மொத்த மாணவர்களில் 84% 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இது பாடசாலைக்கு மட்டுமல்லாது அட்டாளைச்சேனை கல்வி சமூகத்திற்கே பெருமை சேர்த்த சிறப்பான தருணமாகும்.
இந்த மகத்தான வெற்றியின் பின்னணியில், மாணவர்களின் கடின உழைப்பு, பெற்றோர்களின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் இடைவிடாத வழிகாட்டுதல், அதிபர் OLM. றிஸ்வான் அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவம் ஆகியவை வெளிப்படையாகத் அடித்தளமாகும்.
குறிப்பாக, மாணவர்களை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்ற ஆசிரியர் எம்.சி.எம். அறூஸ், தரம் நான்கை கற்பித்த எம்.ரி.எப்.ஜெஸ்ரி, Ms. ஸஹ்னஸ் பானு, தரம் 01–03 வரை வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களும், மேற்பார்வை செய்து வழிநடத்திய பிரதி அதிபர் ஏ.எல். நழீமுடீன் ஆகியோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிபர் மற்றும் முழுப் பாடசாலை சமூகத்திற்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கின்றோம்.