மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயம் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
அப் பாடசாலை மாணவர்கள் 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவ்வெற்றி அல் அர்ஹம் வித்தியாலயத்திற்கு பெருமையைக் கூட்டியதோடு மாணவர்களின் முயற்சிக்கு ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாராட்டுகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
மேலும், இச்சாதனையில் பங்காற்றிய மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.