(எம்.ஜே.எம். சஜீத்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் காதர் றிழா முஹம்மத் என்பவருக்கு கடந்த (2025.09.01) ஆம் திகதி இலங்கை கடற்படைத் தளபதி Vice Admiral BAKSP பாணகொட, RSP, USP, ndc, psc. வினால் “Surface Warfare Bagde” என்றழைக்கப்படும் கடற்படை போர்த்தள பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தனது 13 ஆண்டுகள் சேவையையும் இவரது சிறப்பான ஆளுமையினையும் பாராட்டும் விதமாக இந்த கெளரவிப்பு இடம்பெற்றுள்ளது.
இவர் கடற்படை பொறியியல் பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதோடு பல்வேறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதோடு 2021 ஆம் ஆண்டு கடற்படையினரால் நடாத்தப்பட்ட போர் மற்றும் மேலாண்மை தலைமைத்துவ பயிற்சி, “Warfare Leadership and Management course”இல் முதலாவது இடத்தைப் பெற்று அட்டாளைச்சேனை மண்ணிற்கு பாரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.